Saturday, 26 January 2019
Saturday, 12 January 2019
பாெங்கல் திருவிழா காெண்டாட்டம்-12.01.2019
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கருத்துக்கு இணையாக தை மாதத்தின் முதல் நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
அக்க்ஷயா கல்வி குழுமம் ஒருங்கிணைந்து தைத்திருநாளாம் பாெங்கல் விழாவை ஆடல், பாடல், விளையாட்டு, பாேட்டிகள் என்று இனிதே காெண்டாடியது. மாணவர்களுக்கு பரிசும், பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை தாளாளரால் வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)